கைவினைப்பொருட்கள் வழி கற்றல் கற்பித்தல்

Resource Info

Basic Information

கைத்தொழில் கல்வி, படைப்புத்திறனை போதிப்பதாக இருப்பதுடன்,முழுமையானதாகவும் அதே நேரத்தில் ஒரு வேலைத் திறனாகவும் போதிக்கப்பட வேண்டும். மேலும் மற்ற பாடங்களைப் போதிப்பதிலும் இந்த கைத்தொழில் பற்றி சேர்த்து போதிக்கலாம். அதேபோல் கைத்தொழில் பாடம் படிக்கும்போது சுற்றுச்சூழல், சமூகம், பாலியல், சமத்துவம் பற்றியும் சேர்த்துப் படிக்க வேண்டும்”. (பக். 55, NCF 2005à NCF-தேசிய கலைத்திட்ட வடிவைப்பு-தமிழாக்கத்தில் பக்கம் எண் மாறுபடலாம்)

                மேற்கூறப்பட்ட கலைத்திட்ட வடிவமைப்பின்படி கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சியை மாணவர்களுக்கு சிறுவயது முதலே கொடுக்கும்பொழுது அவர்கள் தனக்கு ஏதோ தெரியும். தன்னாலும் ஒரு அழகிய பொருளை உருவாக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் முன்னேற ஒரு வாய்ப்பாக அமையும்.  பொறுப்பு மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்ந்து முன்னேற, ஆசிரியர்களாகிய நாம் துணையாய் இருந்து வழிகாட்டுவது நமது தலையாய கடமையாகின்றது. மெதுவாகக் கற்கும் மாணவர்கள் கூட கலைப்பொருட்கள் செய்வதிலும், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிக்க ஆர்வத்துடன் ஈடுபடுவர் என்பது கண்கூடாக கண்ட உண்மையாகும்.

Duration: 
05 hours 00 mins
முன்னுரை: 

"நான்காம் வகுப்பு, இரண்டாம் பருவம், தமிழ்ப்பாடத்தில் பாடம் - 2, “ஒளிமயமான எதிர்காலம்” என்ற தலைப்பில் நெகிழிப் (plastic) பொருள்களைப் பயன்படுவத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் நெகிழிப் பொருட்களால் சுற்றுப்புற சீர்கேடு,  தீய விளைவுகள் ஏற்படுவது விளக்கப்பட்டுள்ளது. மேலும் நெகிழிப் பொருட்களால் நன்மையா ? தீமையா ? சுற்றுப்புறச் சீர்கேட்டைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன? போன்றவை பற்றி கருத்தாடல் போல் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

                நெகிழிப் பொருட்களால் தீமைகள் தான் அதிகம் என்றாலும் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது. ஆனால் நாம் குறைத்துக் கொள்ளலாம் என்பது உணர்த்தப்பட்டுள்ளது. மேலும் குப்பையில்லாமல் நம் பள்ளி மற்றும் சுற்றுப்புறத்தை எப்படி வைத்துக் கொள்வது ? வீணாகும் பொருள்களை  வேறு எந்த முறைகளில் பயன்படுத்த முடியும் ? என்பன போன்ற கருத்துக்கள் வலுவூட்டப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு நாம் எத்தகைய செயல்பாடுகளைத் தரப்போகின்றோம் என்பதைச் சிந்தித்த பொழுது எனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி செயலாக்கத்தை உருவாக்கினேன்." என்று தனது வகுப்பில் கைவினைப்பொருட்கள் வழி கற்றல் கற்பித்தல் எவ்வாறு நடைபெற்றது என விளக்குகிறார் ஆசிரியர். சாந்தகுமாரி, புதுச்சேரி.

இது "திசைமானி"(பாதை-2, பயணம்-5) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

Objective: 

மனப்பான்மைகளும் மதிப்புகளும்

பாராட்டத்தக்க பண்புடைமை

1.            நண்பர்களுக்கு உதவி செய்தல்

2.            சொல்லிலும் செயலிலும் அனைவருக்கும் மதிப்பளித்தல்

3.            பொருட்களைப் பாதுகாப்பாகக் கையாளுதல்

4.            அடுத்தவருக்கு முன்வந்து உதவுதல் / விட்டுக்கொடுத்தல்

சுற்றுச்சூழல் மதிப்புகள்

1.            நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், மறு பயன்பாடு மற்றும் மறு சுழற்சி பற்றி அறிதல்.

2.            சுற்றுப்புற மாசினால் விளையும் தீமைகளை அறிதல்

3.            சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்றல்.

4.            சுற்றுப்புறச் சூழல் சார்ந்த செய்திகளைப் பரப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

4.            சுற்றுப்புறச் சூழல் சார்ந்த செய்திகளைப் பரப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

18487 registered users
7228 resources