கேள்விகளுக்கான சுவர்

Resource Info

Basic Information

வகுப்பறையில் உரையாடல்கள் நடக்காத வரையிலும், அது சலிப்பையும் ஏற்படுத்தும், உயிரற்றதாகவும் இருக்கும்.

Duration: 
(All day)
முன்னுரை: 

இது ஒரு தீவிரமான அல்லது கடினமான செயலன்று.

 

Activity Steps: 

ஒரு சார்ட்டை(chart ஐ) வகுப்பறையில் ஒட்டினேன். மாணவர்கள் மனதில் இருக்கும் தீர்க்கப்படாத கேள்விகளை(எனது பாடமான-அறிவியல் சம்பந்தமானதோ அல்லது வேறு பாடத்திற்கு தொடர்புடையதோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) அந்த சார்ட்டில் எழுதுமாறு கூறினேன்.

ஓரிரு நாட்களில் பாதி சார்ட் கேள்விகளால் நிறைந்திருந்தது.

அவர்களுடைய சந்தேகங்கள் மாறுப்பட்டதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்தது. உதாரணத்திற்கு..

  • –   அணு எண்ணையும், நிறை எண்ணையும் எவ்வாறு கண்டுபிடிப்பது?
  • –   ஆர்ச்சிட்(orchid) என்றால் என்ன?
  • –   சீதல் மானிற்கு தமிழ் பெயர் என்ன?
  • –   எவ்வாறு படிப்பது?
  • –   சிறுத்தை, சிறுத்தைப் புலி, வலியச் சிறுத்தை ஆகிய விலங்குகளை எவ்வாறு இனங்காண்பது/அடையாளம் காண்பது?
  • –   யார் மனிதன்?

ஒரு வாரத்திற்குள் வேறொரு சார்ட்டை ஒட்ட வேண்டியதாயிற்று!

அது மட்டுமின்றி, கேள்வி கேட்க தயங்கிய குழந்தைகளும், முன்வந்து பங்களித்தனர்.

என்ன ஒரு அழகான கேள்வியை அவர்கள் எழுப்பினர்!

தீச்சுடர் ஏன் கீழே எறிவதில்லை? அது புவிஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படவில்லையா?

 

ஒரு ஆசிரியராக, இப்பொழுது அக்குழந்தைகளின் உயிரோட்டமுள்ள உற்சாகத்தை  நிலைப்படுத்த அக்கேள்விகளுக்கு விடையளித்தோ அல்லது அவர்களாகவே விடைகளை கண்டறிய சூழலை உருவாக்க எனது வீட்டுப்பாடத்தை செய்ய வேன்டும்.

 ஒரு ஆசிரியருக்கு, இதை விட வேறு என்ன விஷயம்,  திருப்தியளிக்கும்!

 

18487 registered users
7228 resources