ஒரு நதி பாயும் வழியினை காட்டும் வரைபடம்
Resource Info
Basic Information
தொன்றுதொட்டே நதிகளும், அவைகளின் கரைப் பகுதிகளும் மனித இனத்தின் குடியிருப்புகளாக இருந்து வருகிறது. இதற்கு மிகவும் பலரும் அறிந்த உதாரணங்களில் மொஹன்ஜோதாரோ ஹாரப்பா நாகரீகம் அடங்கும். இன்றும் கூட, உலகின் பல முக்கிய நகரங்கள் நதிகரையோரமே அமைந்துள்ளன. டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களை உதாரணங்களாகக் கூறலாம் . உலகின் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் நதிகளையே சார்ந்துள்ளது . பல தொழிற்சாலைகளும், வளர்ச்சித்திட்டங்களும் நதிகளை ஒட்டியே அமைந்துள்ளன. மனிதனின் இந்தச் செயலால் இன்று பல நதிகள் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த செயல் முறைப் பயிற்சியின் மூலம் மாணவர்கள் இந்தியாவில் பாயும் பல நதிகளின் முக்கியத்துவங்கள் பற்றியும், அவைகளின் இயற்கை வளங்களைப் பற்றியும், மாசுபாட்டின் காரணங்கள் பற்றியும், நதிகளைப் பாதுகாப்பதின் அவசியம் பற்றியும் நன்றாக அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும்.

நதிகள் முக்கியமான வளங்கள் என்பதை மாணவர்கள் புரியவதற்கு உதவுதல்.
வளர்ச்சி நடவடிக்கைகள், நதிகளுக்கும், தாவர மற்றும் , விலங்கினங்களுக்கும் தீங்கிழைப்பதின் விளைவுகளைப் புரிவதற்கு மாணர்வகளுக்கு உதவுதல்.
இடம் - வகுப்பறை
காலம் - 15 நாட்கள் தகவல் தொகுப்பு, 2 மணி நேர வகுப்பறை விவாதம்.
குழு அளவு - இருவர்
பொருத்தமான நேரம் - எந்த நேரமும்.
தேவையான பொருட்கள் - பேனா, புத்தகம்.
பயிற்சி முறை -
- இந்தப் பயிற்சிக்கு, மாணவர்கள் இருவரான குழுவாக தங்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு இரட்டையர் குழுவும் ஒரு நதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர், மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த நதியைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.
- சில மாதிரிக் கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிக் கேள்விகளுடன் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன், ஆசிரியர்கள் மாணவர்களுடன் தீவிரமாக மூளைக்கு நன்கு வேலை கொடுக்கும் அளவில் சிந்தித்து, விவாதம் நடத்தி மேலும் கேள்விகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- மாணவர்களுக்குத் தகவல் சேகரிக்கப் பதினைந்து நாள் அவகாசம் கொடுக்க வேண்டும்.
- மாணவர்கள் தாங்கள் சேகரித்த தகவல்களை ஆதாரமாக வைத்து, அவர்களை ஒரு சுவரொட்டி (போஸ்டர் ) தயாரிக்க ஊக்கிவிக்க வேண்டும்,
- வகுப்பில் அந்த சுவரொட்டியை பற்றி விளக்கம் அளிக்கச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சுவரொட்டி விளக்கத்திற்குப் பின்னும் அதைப் பற்றி மாணவர்கள் விவாதம் செய்ய வேண்டும்.
மாதிரிக் கேள்விகள் |
சேகரிக்கப் பட்ட தகவல் |
நதியின் பெயர் (வரைபடத்துடன் ) |
|
நதி மூலம் (ஏரி, உறை பனிப் படலம் ஆகியவைகள் ) |
|
முக்கியமான இணை நதிகள் |
|
முக்கியமான பிரியும் நதிகள் |
|
நதி பாயும் மாநிலங்கள் / நாடுகள் |
|
நதியோடு தொடர்புடைய புராண ஆதாரங்கள் |
|
நதிப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இத்தகைய வளர்ச்சி செயல் திட்டங்கள் எந்த விதங்களில் நீர் மாசடைவதற்குக் காரணமாகின்றன? |
|
நதி அல்லது அதன் கரைப் பகுதிகளிலோ எதாவது சுற்றுச் சூழல் பேரழிவு ஏற்பட்டுள்ளதா? |
|
நதி பாயும் வழியில் இருக்கும் பல்வேறு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் |
|
நதியில் குறிப்பாகக் காணப்படும் இயற்கை வளத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள். |
|
நதியில் உள்ள வளங்களுக்கு மனிதர்களின் அச்சுறுத்தல்களால் ஏதாவது ஆபத்து உண்டா? |
|
முக்கிய நீர்வீழ்சிகள், அணைகள், மற்றும் பல. |
|
பெங்களூரில் இருக்கும் சுற்றுச் சூழல் கல்வி மையத்தின் சுக்பிரிட் கவுர் - Sukhprit Kaur - என்பவரால் இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டது. புகைப்படம் - எம்.கே. சப்தா கிரிஷ் - Saptha Girish M. K. |