உங்கள் குட்டி உலகத்தை உருவாக்குங்கள்

Resource Info

Basic Information

செடிகள் வளர்ப்பதில், சாகசங்களும், வேடிக்கைகளும் நிறைந்திருக்கும். அனைத்து வகுப்புகளுக்கும் பொருத்தமான ஒரு உற்சாகமான செயல்பாடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது கீழ் கொடுக்கப்பட்ட கருப்பொருள்களை தொட்டு உள்ளடக்கும்:

 • –   தாவரங்களின் வாழ்க்கை சுழற்ச்சி
 • –   சுற்றுச் சூழல்
 • –   மறுசுழற்ச்சி
 • –   கிரீன்ஹவுஸ் விளைவு(பைங்குடில் விளைவு)
 • –   நீர் சுழற்ச்சி
 • –   விதை முளையிடுதல்

கற்போரின் வயதை மனதில் கொண்டு, ஆசிரியர்கள் எவ்வளவு தூரம் மாணவர்கள் கருப்பொருளை ஆராயலாம் என்பதை முடிவெடுக்கலாம்.

 

நன்றி: http://www.instructables.com/id/Self-Watering-Terrarium/?ALLSTEPS

Duration: 
(All day)
முன்னுரை: 

நாள் கணக்காக குழந்தைகளை ஈடுபடுத்த இங்கு ஒரு செயல்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

 

Objective: 

கீழே கொடுக்கப்பட்ட கருப்பொருட்களை புரிந்து கொண்டு, அதனை பாராட்டவும், ஆராய்ச்சி செய்வதும் இச்செயல்பாட்டின் நோக்கமாகும்:

 • –   தாவரங்களின் வாழ்க்கை சுழற்ச்சி
 • –   சுற்றுச் சூழல்
 • –   மறுசுழற்ச்சி
 • –   கிரீன்ஹவுஸ் விளைவு(பைங்குடில் விளைவு)
 • –   நீர் சுழற்ச்சி
 • –   விதை முளையிடுதல்

 

Activity Steps: 
 • –   ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து மூடியுடன் சுத்தம் செய்து, அதன் வெளியில் ஏதேனும் லேபிள் இருப்பின் அதனையும் அகற்றவும்.

 

 • –   முதலில், பாட்டிலிற்குள் இரண்டு விரல்கள் அங்குல அளவிற்கு மணல் இடவும்.

 

 • –   பின்பு, இந்த மணல் மீது, வதைகள் முளைப்பதற்கேற்ற மண்ணை நான்கு விரல்கள் அங்குல அளவிற்கு நிறப்பவும்.

 

 

 • –   மண்ணை சற்று கிளறி விட்டு விதைகளை பரப்பி போடவும்.

 

 • –   ஒரு சிறு மூடியிலோ அல்லது கிண்ணத்திலோ தண்ணீர் எடுத்து, மெதுவாக தண்ணீரை மண் மீது ஊற்றவும். அத்தண்ணீர் அடியிலுள்ள மணல் வரை செல்லுமாறும், மேலே உள்ள மண் கேக்கை போன்று மிருதுவாக காட்சியளிப்பது போன்றும் தோன்றும் அளவிற்கு ஒரே ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. அதுவே பல நாட்களுக்கு தாங்கும்.

  

 

 • –   பிளஸ்டிக் பாட்டிலை மூடி, சூரிய ஒளி படும் இடத்தில் வைத்துவிடவும். சில நாட்களில், விதைகள் முளைக்க ஆரம்பித்துவிடும்.

 வேடிக்கையுடன், ஆராய்ந்து, செடிகளை வளருங்கள்!

18472 registered users
7227 resources