எங்களைப் பற்றி

“டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா மின் தளத்திற்கு வரவேற்கிறோம்.
 

ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சியாளர்கள், கல்விக்காக இந்தியாவில் பணியாற்றும் அனைவருக்கும் இந்த இணையம் ஒரு மின் தளமாகும். இந்த மின் தளம், தேசிய அறிவுக் கழகம் (National Knowledge Commission) மற்றும் அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் (AzimPremji Foundation) ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியாகும்.

ஆசிரியர் மின் தளம் என்பது ஆசிரியர்களுக்குப் பலவிதமான கற்றல்-கற்பித்தல் கருவூலங்களை அளிப்பதன் மூலம், அவர்களின் பாடம் குறித்த அனுபவ அறிவையும், அதனை எவ்வாறு வகுப்பறையில் கற்பிக்க வேண்டும் என்பதையும் கற்பித்து திறன்மிக்கவர்களாக அவர்களை உருவாக்கும் ஒரு முயற்சியாகும். ஆசிரியர்களின் சொந்த அறிவியல் மற்றும் கல்வியியல் ஆகியவைகளை வளம்படுத்தி மேலும், புதிய கற்றல்/கற்பித்தல் வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன், வகுப்பில் பயன்படுத்தும் கற்றல்-கற்பித்தல் கருவிகளை சிறந்த உதவும் ஆதாரமாக அளித்து இந்த மின் தளம் உதவுகிறது. அத்துடன் கருத்துக்களை ஒரு பொதுவான தளத்தில் பகிர்ந்து கொள்ளவதன் மூலம், ஆசிரியர்களுக்கிடையே ஒரு ஆக்க பூர்வமான இணைப்பு உருவாக வழிவகைசெய்கிறது.
 

இக்கருவூலங்கள் அனைத்தும் பயனர்களாலும்,  எங்களுடன் கூட்டுச் சேர்ந்த பல அமைப்புகளாலும், கல்வி ஆர்வலர்களாலும், அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் மற்றும் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்களாலும் உருவாக்கப்பட்டவைகளாகும். சிறந்த உங்களது படைப்புகளை உருவாக்கி எங்களுக்கு உதவுவதன் மூலம் நீங்களும் இந்த உன்னதமான பணியில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறீர்கள். இந்த மின் தளத்தை  ஆரோக்கியமானதாகவும், செயல்திறன்மிக்கதாகவும் உருவாக்க, உங்களது சீரிய கருவூலப் பங்களிப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

மாநில மொழிவழிக் கல்வி கற்பிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியர்களுக்கு உதவுவதுதான், எங்களது முக்கிய இலக்கு. ஆகையால், அந்தந்த மாநில மொழிகளில் பாடப்பொருட்களை உருவாக்கி, பகிர்ந்து கொள்ள உதவும் இந்த மின் தளம், மிகவும் முக்கியமானதெனக் கருதுகிறோம். தற்பொழுது, ஐந்து இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் வளமான பாடப்பொருட்கள் இத்தளத்தில் உள்ளன. வெகு விரையில், உங்களது தொடர்ந்த ஆதரவுடன், நாங்கள் மற்ற மாநில மொழிகளுக்கும் விரிவுபடுத்துவோம் என நம்புகிறோம். எங்களது அனைத்து கருவூலங்களையும், லாப-நோக்கின்றி கல்வி மேம்பாட்டிற்காக முயலும் அனைத்துச்செயல்களுக்கும் நீங்கள் பயன்படுத்தலாம். 

நாடு முழுதும் உள்ள ஆசிரியர்கள் பலவித மொழிகளில் எந்த தடையுமின்றி தங்களது கல்வி சார் உள்ளுணர்வுகளையும், சிறந்த பயற்சி முறைகளையும் பகிர்ந்து கொள்ள வசதியான ஒரு களமாக இந்த மின் தளம் திகழும். வளமான கல்விக் கருவூலங்கள், உரைசார் வடிவிலும், பல்லூடகம் என்ற மல்டி மீடியா வடிவிலும் (அதாவது கட்டுரைகள், கொள்கை அறிக்கைகள், கையேடுகள், கருவிகள், பாட திட்டங்கள், பயிற்சித் தாள்கள், செயல் முறைகள் முதலியன) இந்த மின் தளத்தில் கிடைக்கும்.

அந்த குறிக்கோளை அடைய இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கல்வித் துறையில் பணியாற்றும் பல அமைப்புகளின் ஆதரவு எங்களுக்கு உண்டு. இந்த கூட்டாளிகளும், தனிப்பட்ட படைப்பாளிகளும் தான் எங்களது முயற்சிகளுக்கு முதுகெலும்பாக இருந்து உதவுகிறார்கள். நீங்களும் உங்களது தரமான படைப்புகளை அளித்து உதவலாம்.

 

19861 registered users
7801 resources